திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி செருக்கணூர் அருகே உள்ள தரைப்பாலம் மின்விளக்குகள் இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே பாலத்தில் மின்விளக்குகள் அமைப்பதற்கு மின் வாரிய துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?