கால்வாய் மூடப்படுமா?

Update: 2023-03-12 12:57 GMT

சென்னை அடையாறு தேவி கருமாரியம்மன் கோவில் தெரு அருகே கடந்த சில மாதங்களூக்கு முன்பு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் திறந்த நிலையில் உள்ள பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் பாதசாரிகள் தவறி விழுந்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்