சேதமடைந்த மின்கம்பங்கள்

Update: 2023-03-12 12:30 GMT

திருவள்ளூர் மாவட்டம்,வெங்கத்தூர் கண்டிகை கிராமம் வேலாயுத ரெட்டி தெருவில் உள்ள மின் கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் அபாயம் இருப்பதால் அப்பகுதியினர் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். விபத்து ஏதும் ஏற்படும் முன்பு சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின் வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்