செங்கல்பட்டு மாவட்டம், அனுபந்தபுரம் தர்காஸ் கிராமத்தில் தெரு நாய்கள் அதிகம் சுற்றிதிரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் போது நாய்கள் துரத்துவதால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும் கால்நடைகளை கடிப்பதால் கால்நடைகளை வளர்போர் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.