திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ஜ.பீ.எஸ்டேட் ஓம்சக்தி கோவில் அருகே கட்டப்பட்ட குளத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இவை நடைபாதையில் சாய்ந்து இருப்பதால் எந்த நேரத்திலும் இடிந்து பொதுமக்கள் மேலே விழும் அபாயம் உள்ளது. எனவே குளத்தின் சுற்று சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.