சென்னை ஓட்டேரி, ஆர்ச் பிரிக்கிளின் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு குளம் போல தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இவை துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயிலுள்ள அடைப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.