மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட 6-வது வார்டு குருமணி நகர் பகுதியில் பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள வாழை மரங்களை சேதப்டுத்தி வருகிறது. மேலும் அந்த பகுதியில் சாக்கடைகளில் பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரிவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்யாணிசுந்தர் ,குத்தாலம்.