மயிலாடுதுறை மாவட்டம் புனுகீஸ்வரர் கோவில் வடக்கு வீதியில் நாள் தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை ஓரங்களில் மழைநீர் சேகரிப்பு கால்வாய் கட்டும் பணி நடப்பதால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை