காஞ்சீபுரம் மாவட்டம், முடிச்சூர் வரதராஜபுரம் பாரத் நகர் 2-வது தெருவில் உள்ள மின் கம்பம் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.