செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ரெயில் நிலையம் செல்லும் பாதையில் சாலையின் இருபுறங்களிலும் செடிகள் வளர்ந்து நடப்பதற்கு இடையூறாக இருப்பதாக `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் பாதை சீரமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.