திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் வடக்கு பிரகாஷ் நகரில் செயல்பட்டு வரும் குப்பை கிடங்கால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதியை கடந்து சென்றாலே துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.