சென்னை சூளை பகுதியிலுள்ள பட்டாளம் வாடியா சிறுவர் பூங்கா சரிவர பரமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பூங்காவில் உள்ள உபகரணங்களும், நடைபாதையும் சேதமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே பூங்காவை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.