சென்னை அரும்பாக்கம், அமராவதி 2-வது கிழக்கு தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டியில் மின் வயர்கள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் இருப்பதாக `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார துறையினரின் உடனடி நடவடிக்கையால் மின் இணைப்பு பெட்டி சரிசெய்யப்பட்டது. இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்ததோடு, நடவடிக்கை எடுத்த மின்சார துறையினருக்கும், துணைநின்ற `தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.