காஞ்சீபுரம் மாவட்டம், திம்மராஜம்பேட்டை கம்பளியான் தோப்பு பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பணி நடைபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் சாலைகளில் பள்ளங்களூம், கான்கிரீட் கம்பிகள் வெளிபுறத்தில் தெரியும் படி ஆபத்தான முறையில் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து பணியை விரைந்து முடிக்க வேண்டுகிறோம்.