காஞ்சீபுரம் மாவட்டம், துளசாபுரம் ஊராட்சி கண்டிவாக்கம் கிராமம் துவக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் 50 ஆண்டு பழமையானது என்பதால் பழுதடைந்து மழை காலங்களில் மழைநீர் வகுப்பறையில் தேங்குகிறது. இதனால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளியின் பின்புறம் உள்ள இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் அமைக்க கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.