செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் விளாங்காடு, கொக்கரந்தாங்கல் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள சுற்றுசுவர் இடிந்து விழுந்து சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே சுற்று சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.