காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரம்புதூர் டி.எம்.ஏ நகர் 15-வது வார்டில் கழிவுநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று பரவும் சூழல் உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து தேங்கும் கழிவுநீரை அகற்றி கால்வாயை சீர்செய்ய வேண்டும்.