சென்னை பி.எச். சாலையிலிருந்து எழும்பூர் செல்லும் வழியில், பிளவர்ஸ் ரோடு தபால் அலுவலகம் எதிரில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணி மிகவும் மந்தமாக நடக்கிறது. இதனால் அந்த இடத்தில் அதிகமாக விபத்துகள் நடக்கின்றன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி விரைவில் மழைநீர் கால்வாய் பணியை முடித்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.