சென்னை அடையாறு இந்திரா நகர் 2-வது அவென்யூ அமைந்திருக்கும் சாலையில் கடந்த வாரம் குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டது. அந்த இடத்தின் நடுவே பள்ளம் உள்ளதால் அதனை சரியாக சீரமைக்கவில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி இந்த இடத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டுகிறோம்.