காஞ்சீபுரம் மாவட்டம், திரிசூலம் பெரியார் நகர் 2-வது தெருவில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின் கம்பத்தின் கான்கீரிட்கள் விரிசல் அடைந்து கம்பிகள் தெரியும்படி ஆபத்தான நிலையில் உள்ளது. விபத்து ஏதும் ஏற்படும் முன்பு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டும்.