காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு தனியார் மருத்துவ கல்லூரி அருகே சாலையில் கழிவுநீர் கசிந்து வருவதாக `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. சுகாதார துறையினரின் உடனடி நடவடிக்கையால் கழிவுநீர் அகற்றப்பட்டு சாலை சீர் செய்யப்பட்டது. இதானால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு, நடவடிக்கை எடுத்த சுகாதார துறையினருக்கும், துணைநின்ற `தினத்தந்தி-'க்கும் நன்றியை தெரிவித்தனர்.