கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

Update: 2023-02-19 10:49 GMT

திருவள்ளூர் மாவட்டம், திரமுல்லைவாயில் நகரிலிருந்து ஆவடிக்கு 62 என்ற வழிதட எண்ணில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் இந்த சேவை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இந்த பஸ் சேவை தொடங்கப்படவே இல்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அன்றாட பணிகளுக்கு செல்வோர் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து மீண்டும் 62 என்ற வழிதட எண்ணில் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்