சென்னை ஓட்டேரி, சரவணா தியேட்டர் அருகே உள்ள பிரிக்லின் சாலையில் மரப்பலகைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்ல சிரமப்படுகிறார்கள். மேலும் பலகைகள் விழுந்து விபத்து ஏற்படவும் சூழலும் நிலவுகிறது. எனவே போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டுகிறோம்.