மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் பயணச்சீட்டு அலுவலகம் முறையாக திறப்பது இல்லை. இதனால் பொதுமக்கள் தொலை தூர இடங்களுக்கு செல்ல முன்பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் முன்பதிவு மையம் செயல் பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொதுமக்கள் மயிலாடுதுறை