சென்னை அடையாறு, காமராஜ் அவென்யூ 2-வது சாலையில் சாக்கடை கழிவு நீர் செல்வதாக `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மாநகராட்சியின் உடனடி நடவடிக்கையால் கழிவுநீர் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த மாநகராட்சிக்கும், துணை நின்ற `தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.