காஞ்சீபுரம் மாவட்டம், திம்மையன்பேட்டை ஊராட்சி ஆண்டவர் நகர் குடியிருப்பு சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லவே சிரமப்படுகிறார்கள். மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தவறி விழும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய வேண்டும்.