செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் காயத்ரி நகர், வெங்கட்ராமன் தெருவில் நாய்கள் அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் அப்பகுதியில் செல்லும் பொதுமக்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.