மழைநீர் வடிகால் பணியில் அலட்சியம். சென்னை மாநகராட்சி 36- வது வார்டு சர்மா நகர் 4 -வது தெரு அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்கள் தேங்கி உள்ள தண்ணீரை அகற்றாமல் அதன் மீது கான்கீரிட் போடுகிறார்கள். தலைமை செயலாளர் வெ.இறையன்பு தண்ணீரை அகற்றிவிட்டு தான் வடிகால் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியும் ஒப்பந்த நிறுவனங்கள் மெத்தன போக்கை கடைபிடிக்கின்றன. ஏன் இப்படி அலட்சியமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டால் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மிரட்டல் தொனியில் பேசுகிறார்கள். எனவே மாநகராட்சி உயரதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் தரமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.