உடனடி நடவடிகைக்கு பாராட்டு

Update: 2023-02-12 12:08 GMT

சென்னை திருமங்கலம், திருவல்லீஸ்வரர் நகர் வெற்றிவிநாயகர் தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட வாசல் முன்பு பகைபிடிப்பதை பலர் வாடிக்கையாக கொண்டிருப்பதையும், சிகெரெட் புகை காரணமாக பள்ளி மாணவ,மாணவிகள் பாதிக்கப்பட்டு வருவது குறித்தும் `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொளியாக பள்ளிக்கூடம் எதிரே உள்ள டீக்கடை, பெட்டிக்கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பள்ளி முன் `இங்கு யாரும் புகைப்பிடிக்க கூடாது' என்று வலியுறுத்தும் விதமாக எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருக்கிறது. போலீசாரின் இந்த பொறுப்பான நடவடிகைக்கும், துணைநின்ற `தினத்தந்தி'-க்கும் அப்பகுதியினர் பாராட்டை தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்