பயணிகள் கோரிக்கை

Update: 2023-02-08 14:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு-சென்னை கடற்கரை புறநகர் ரெயில் சேவை கொரோனா கால கட்டத்தில் இருந்த ரெயில் சேவையே தற்போதும் உள்ளது. தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான 3-வது வழிபாதை பயன்பாட்டுக்கு வந்த பின்பும், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பும் கூட ரெயில்களின் எண்ணிக்கைகள் இன்னும் அதிகரிக்கப்படவில்லை. இதனால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே ரெயில் எண்ணிக்கையை அதிகரிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்