சென்னை எழும்பூர் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே சமூக விரோதிகள் சிலர் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த பகுதியில் பல உணவகங்கள் இருப்பதால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவ வழிவகுக்கிறது. இதனால் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். எனவே இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் .