சென்னை கீழ்ப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் உள்ள நடைபாதை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் தவறி விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்களும் நிகழ்கிறது. எனவே விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.