திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சந்திரா சிட்டி வசந்த் நகரில் பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று பரவும் சூழல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.