சென்னை ராயபுரம், பண்டிதர் கொள்ளாபுரிநகர் மெயின் தெருவில் மின் இணைப்பு கேபிள் நடைபாதையில் இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார துறையினரின் உடனடி நடவடிக்கையால் கேபிள் அகற்றப்பட்டு பாதை சீர் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த மின்சார துறைக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.