ஆசிரியர்களின் நலன் கருதி...

Update: 2023-02-05 13:17 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஏரிக்கரை ரோடு கொலச்சேரி கிராமம் வழியாக வண்டலூர் நெடுஞ்சாலை ஓரத்தில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு மாங்காடு, குன்றத்தூர் பகுதியிலிருந்து பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் குன்றத்தூர் 4 ரோடு பகுதியிலிருந்து ஏரிக்கரை ரோடு வழியாக பள்ளி செல்லு பஸ் வசதி, ஷேர் ஆட்டோ வசதி போன்ற எந்த வசதிகளும் இல்லை. ஆட்டோவில் செல்ல 100 ரூபாய் கேட்கிறார்கள். இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் சிரமத்துக்கிடையே பயணம் செய்கிறார்கள். எனவே இந்த சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் மினி பஸ் அல்லது ஷேர் ஆட்டோ வசதி ஏற்படுத்தி தர வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்