சென்னை, திருவொற்றியூர், அண்ணா நகர் உதயசூரியன் தெருவில் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், பெண்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் சாலையில் நடப்பதற்கே அச்சப்படுகிறார்கள். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் சிரமப்பட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நாய்கள் தொல்லைக்கு நிரந்தர தீர்வு வழங்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.