சென்னை கொடுங்கையூர் பகுதியில் குப்பை கிடங்கிற்கு நேர் எதிரே அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை மாடு கட்டும் கூடாரமாக மாறி விட்டது. மாடுகள் தங்கும் இடமாக மாறிவிட்ட இந்த இடத்தில் பெரும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பயணிகளின் நலன் கருதி பயணியர் நிழற்குடையை மீட்டு தர நடவடிக்கை எடுக்கப்படுமா?