சென்னை கொளத்தூர், மாதவரம் பகுதியில் உள்ள வஜ்ரவேல் நகர் மெயின் ரோடு 2-வது தெருவில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் 6 மாதம் கடந்த பின்னும் பணிகள் முடிவு பெறாமல் பாதியிலேயே நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைக்கு ஆளாகி வருகிறார்கள். உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.