சென்னை விருகம்பாக்கம் ஸ்டேட் பாங்க் காலனி 2-வது தெருவில் உள்ள பாதாள சாக்கடை வடிகால்வாயின் மூடி செங்குத்தான நிலையில் பாதி உள்ளேயும் பாதி வெளியேயும் ஆபத்தான முறையில் காணப்படுகிறது. சாலையில் நடுவே இந்த பாதாள சாக்கடை இருப்பதால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பாதாள சாக்கடை மூடியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.