செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் ரெயில்வே கேட் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. போக்குவரத்து துறையினரின் உடனடி நடவடிக்கையால் பிரச்சினை சரி செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த போக்குவரத்து துறைக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.