சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை, செவுராஸ்ட்ரா நகரின் சாலை மிக மோசமக இருக்கிறது. மேடு பள்ளங்கள் நிறைந்துள்ள சாலையில் பயணம் செய்வதற்கே வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சாலையை சீர் செய்ய போக்குவரத்து துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.