சென்னை செனாய் நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ள சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. இதன் அருகே மின் கம்பம் இருப்பதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டும்.