காஞ்சீபுரம் மாவட்டம் சின்ன காஞ்சீபுரம், பெரியார் நகரில் இருந்து ஓரிக்கைக்கு செல்லும் வழியில் மிலிட்டரி சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள கோகுலம் தெரு அருகே இருக்கும் வளைவு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்துள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், சாலை வளைவில் திரும்பும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே உயிர்சேதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த சாலை பகுதியை சீரமைக்க வேண்டும்....