காஞ்சீபுரம் மாவட்டம், அமுதபடி சித்தி விநாயகர் பூந்தோட்டம் பகுதியில் குப்பை தொட்டி இல்லை. இதனால் குப்பைகளை ஆங்காங்கே கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு நோய் தொற்றும் பரவுகிறது. எனவே சுகாதார துறை அதிகாரிகள் குப்பை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.