காஞ்சீபுரம் பஸ் நிலையம் செல்லும் பெருவாரியான மக்கள் மதுராந்தோட்டம் தெரு வழியாக சென்று வருகிறார்கள். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், அலுவலகம் செல்லும் மக்களும் இந்த தெருவை தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மேற்கூறிய தெரு குறுகலாக இருப்பதால் நடந்து செல்லும் மக்களும், வாகனத்தில் செல்பவர்களும் சிரமத்துக்கிடையே பயணம் செய்து வருகிறார்கள். எனவே இந்த மக்கள் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?