சென்னை எழும்பூர் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள நடைபாதையில் இருக்கும் பாதாள சாக்கடையின் மூடிகள் உடைந்து காணப்படுகின்றன. சில மூடிகள் பாதி உடைந்து ஆபத்தாக காட்சியளிக்கிறது. இதனால் நடைபாதையில் நடந்து செல்லும் பயணிகளுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடைந்த மூடிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.