சென்னை அண்ணாநகர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே அன்னை சத்யா நகர் உள்ளது. இந்தநிலையில் இரவு நேரங்களில் அந்த பகுதிகளில் உள்ள திருநங்கைகள் தினமும் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.