செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியில் இருக்கும் உயிரியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்காக கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.ஆனால் அந்த கழிப்பறை சுகாதரமின்றி உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசி வருவதால் கழிப்பறைக்கு உள்ளே செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.அந்த கழிப்பறையை சுத்தம் செய்ய சம்பந்தபட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.