செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் பகுதியிலிருந்து பூந்தமல்லி செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதோடு, அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே இந்த சாலையை சீர் செய்ய நடவடிக்கை தேவை.