காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பாலாண்டீஸ்வரர் கோவில் தெருவின் சாலை மற்றும் பலாத்தோப்பு தெருவின் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சிறிய மழை பெய்தாலே இந்த தெருவில் நீர் தேங்குகிறது. மேலும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே சாலையை சீரமைத்து தர சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.